நெல்லை - மேட்டுப்பாளையம், திருச்சி - தாம்பரம் சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிப்பு


நெல்லை - மேட்டுப்பாளையம், திருச்சி - தாம்பரம் சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிப்பு
x

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்டன.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06030) செப்டம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் 13 முறை இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

இதேபோல், மறுமார்க்கத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு திங்கட்கிழமைதோறும் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில் (06029) செப்டம்பர் 8-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயிலும் கூடுதலாக 13 முறை இயக்கப்படுகிறது.

மேலும், திருச்சி - தாம்பரம் இடையே வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில்கள் (06190/ 06191) செப்டம்பர் 2-ந் தேதி வரை நவம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்கள் இருமார்க்கத்திலும் கூடுதலாக 65 முறை இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுவிட்டது.

1 More update

Next Story