நெல்லை: 5 வயது குழந்தையின் கண் முன்னே தாய் படுகொலை

இந்த சம்பவம் பற்றி பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:  5 வயது குழந்தையின் கண் முன்னே தாய் படுகொலை
Published on

நெல்லை

நெல்லை தியாகராய நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துமாலை (வயது 35). இவர் தன்னுடைய 5 வயது குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு திரும்பியபோது, இரண்டு மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர்.

இந்த சம்பவம் பற்றி பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அந்த பெண்ணின் உறவினர் ஒருவரை கைது செய்து அவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. நெல்லையில் 5 வயது குழந்தையின் கண் முன்னே தாய் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com