நெல்லை மாநகராட்சி உதவி பொறியாளர் பணியிடை நீக்கம்

நெல்லை மாநகராட்சி உதவி பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நெல்லை மாநகராட்சி உதவி பொறியாளர் பணியிடை நீக்கம்
Published on

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடந்தது. அப்போது நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் தங்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி விசாரணை நடத்தினார். விசாரணையில் மாநகராட்சி உதவி பொறியாளர் பைஜூ பணியில் அலட்சியமாக இருந்ததும், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் கவனக்குறைவாக இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து உதவி பொறியாளர் பைஜூவை பணியிடை நீக்கம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com