நெல்லையில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
நெல்லையில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் திருநெல்வேலி மாநகரம், சுத்தமல்லி குடிசை மாற்று வாரியம் பகுதியை சேர்ந்த சமுத்திரபாண்டி மகன் பாஸ்கர் (வயது 35) ஈடுபட்டு வந்தார்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், போலீஸ் உதவி கமிஷனர் (டவுண் சரகம்) அஜுகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பேட்டை சட்டம் ஒழுங்கு) விமலன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி இன்று பாஸ்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com