நெல்லையில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

நெல்லை மாநகரில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி ஒருவர், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
நெல்லையில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர், கரையிருப்பு. பால்பண்ணைத் தெருவைச் சேர்ந்த மூக்கன் என்பவரை திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர், கரையிருப்பை சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துக்குமரன்(எ) குமரேசன் (வயது 43) கடந்த 20.12.2025 அன்று மூக்கனின் வீடு அருகே அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த முத்துக்குமரன்(எ) குமரேசன் என்பவர், திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) மதன், பேலீஸ் உதவி கமிஷனர் (சந்திப்பு சரகம்) சரவணன், தச்சநல்லூர் (சட்டம், ஒழுங்கு) போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மனாபபிள்ளை ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com