நெல்லை: பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை: பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் கொண்டாநகரம் அருகே உள்ள கல்லூர் பகுதியில் தனியார் பேப்பர் மில் செயல்பட்டு வருகிறது. இந்த பேப்பர் மில்லில் கழிவு பேப்பர்கள் பண்டல் பண்டலாக அடுக்கி வைக்கப்பட்டு அவை அட்டை தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தீ விபத்து

இந்நிலையில், இந்த பேப்பர் மில்லில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பண்டல் பண்டலாக அடுக்கு வைக்கப்பட்டுள்ள பேப்பரில் தீ வேகமாக பற்றி எரிந்து வருகிறது.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்பிலான பேப்பர்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com