போக்சோ வழக்கில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பாராட்டு

தூத்துக்குடியில் பதிவு செய்த போக்சோ வழக்கில், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா துரிதமாகவும் திறம்படவும் புலனாய்வு செய்து உரிய சாட்சிகள், ஆவணங்களை முறையாக சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
போக்சோ வழக்கில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பாராட்டு
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் போக்சோ வழக்கில் சிறப்பாக பணியாற்றிய இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிார்.

போக்சோ வழக்கில் சிறப்பான பணி

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா துரிதமாகவும் திறம்படவும் புலனாய்வு மேற்கொண்டு, உரிய சாட்சிகள் மற்றும் ஆவண ஆதாரங்களை முறையாகச் சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். மேலும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை முறையாக ஒருங்கிணைத்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தருவதில் தலைமைக் காவலர் (ஏட்டு) அரிராணி முக்கியப பங்காற்றினார்.

போலீசாரை பாராட்டிய திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.

இந்த நிலையில் மேற்சொன்ன 2 பேரையும் நேற்று திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, அவர்களின் சிறப்பான பணியைப் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com