

மதுரை,
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதி களில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக நெல்லை, திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில்கள் உள்ளிட்ட தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் நடந்து வரும் தண்டவாள பராமரிப்பு பணிக்காக நெல்லை, திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56003) வருகிற 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை, 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூர்-நெல்லை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56004) மேற்கண்ட நாட்களில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டை-நெல்லை பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56742) வருகிற 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை, வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சேரன்மாதேவி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.56743) மேற்கண்ட நாட்களில் நெல்லையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக சேரன்மாதேவி ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்படும்.
அதேபோல, செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் (வ.எண்.16848) வரு கிற 10-ந் தேதி மற்றும் 24-ந் தேதிகளில் மதுரையில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும். இந்த ரெயில் சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண். 16352) வருகிற 10-ந்தேதி மற்றும் 24-ந்தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும்.
நாகர்கோவில்-கோவை ரெயில் (வ.எண்.16321) வருகிற 14-ந்தேதி, 19-ந்தேதி, 21-ந்தேதி, 22-ந்தேதி, அடுத்த மாதம் 5-ந்தேதி, 6-ந்தேதி, 8-ந் தேதி, 9-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி, கரூர் செல்லும்.
நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16354) வருகிற 5-ந் தேதி மற்றும் 19-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும். இந்த ரெயில் வருகிற 26-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 3-ந்தேதிகளில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி வழியாக செல்லாமல் நேரடியாக கரூர் செல்லும்.