நெல்லை: முன்பகையில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

நெல்லை மாநகரம் சமாதானபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த பெண்ணை, சாந்திநகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், முன்பகை காரணமாக அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி தாக்கியுள்ளார்.
நெல்லை: முன்பகையில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
Published on

நெல்லை மாநகரம், பாளையங்கோட்டை சாந்திநகரை சேர்ந்த முகைதீன் அப்துல்காதர் மகள் ரபிக்ரூபினா (வயது 27). இவர் பாளையங்கோட்டை, சமாதானபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை தாழையூத்து சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் மகிமைதாஸ்(25) என்பவர் முன் பகையின் காரணமாக அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி தாக்கியுள்ளார்.

இதுகுறித்து ரபிக்ரூபினா கொடுத்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மகிமைதாஸை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com