நெல்லை: பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மூக்கன் மகன் முருகன் என்பவரை திருநெல்வேலி, தச்சநல்லூர், ஊருடையார்புரத்தைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் ராம்சூர்யா(எ)ரன்(24) என்பவர் தச்சநல்லூர் பைபாஸ் ரவுண்டானா அருகே 2025 மார்ச் 29-ம் தேதி பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டியுள்ளார்.
மேற்சொன்ன வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த ராம்சூர்யா(எ)ரன் என்பவர் திருநெல்வேலி மாநகர (மேற்கு) போலீஸ் துணை கமிஷனர் கீதா, ஜங்ஷன் சரகம் போலீஸ் உதவி கமிஷனர் தர்ஷிகா நடராஜன் மற்றும் தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி நேற்று (09.04.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.






