நெல்லை: பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வலதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி தாலூகா, ராஜவல்லிபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சுந்தரம் மகன் வலதி (வயது 26) என்பவர் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலூகா, தாதன்குளம், அண்ணாமலை செட்டியார் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் வள்ளிநாயகம் என்பவரை திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மிரட்டி, பணம் பறித்துள்ளார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வலதி என்பவர், திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தலைமையிடம்) விஜயகுமார், திருநெல்வேலி ஜங்ஷன் சரக போலீஸ் உதவி கமிஷனர் தர்ஷிகா நடராஜன் மற்றும் திருநெல்வேலி இருப்புப்பாதை காவல் வட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மோகன் ஆகியோரின் பரிந்துரையின்பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி நேற்று (26.04.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.






