நெல்லை: திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

பாளையங்கோட்டையில் திருட்டு, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் சுத்தமல்லி பகுதியை சேர்ந்த வாலிபர் ஈடுபட்டு வந்தார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை பகுதியில் திருட்டு, கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி வ.உ.சி. நகரை சேர்ந்த மணிகண்டன் மகன் ஹரிஹரசுதன் (வயது 21) ஈடுபட்டு வந்தார்.
இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) வினோத் சாந்தாராம், போலீஸ் உதவி கமிஷனர் (பாளையங்கோட்டை சரகம்) சுரேஷ், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி இன்று ஹரிஹரசுதன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story






