நெல்லை: அடிதடி மிரட்டல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாவட்டம், கோவில்குளத்தைச் சேர்ந்த வாலிபர் அடிதடி, மிரட்டல் வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி.யின் கவனத்திற்கு வந்தது.
நெல்லை: அடிதடி மிரட்டல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் அடிதடி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம், கோவில்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(எ) ஆறுமுககுட்டி மகன் இசக்கிராஜா (வயது 20) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நபர் அடிதடி மற்றும் மிரட்டல் வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. சதீஷ்குமார் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர் மேற்சொன்ன நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், இசக்கிராஜா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com