நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை ஏற்றப்படும் தங்க விளக்கு ஏற்றப்பட்டது

தை அமாவாசையை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை ஏற்றப்படும் தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டது.
நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை ஏற்றப்படும் தங்க விளக்கு ஏற்றப்பட்டது
Published on

நெல்லை,

நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையன்று பத்ர தீப திருவிழா விமரிசையாக நடைபெறும். அதற்கு முன்னதாக, முக்கிய நிகழ்வாக தை அமாவாசையை முன்னிட்டு ஆண்டுக்கு ஒருமுறை தங்க விளக்கு ஏற்றப்படும்.

இந்த நிலையில், இன்று மாலை 6 மணியளவில் சுவாமி சன்னதி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டது.

இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் தங்க விளக்கும், அதன் அருகில் உள்ள 2 வெள்ளி விளக்குகளையும் ஏற்றினார்கள். தொடர்ந்து விளக்குக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து, தை அமாவாசையையொட்டி நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபம் ஏற்றப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com