நெமிலி பேரூராட்சி கூட்டம் நடந்தது

நெமிலி பேரூராட்சி கூட்டம் தலைவர் ரேணுகாதேவி தலைமையில் நடந்தது.
நெமிலி பேரூராட்சி கூட்டம் நடந்தது
Published on

நெமிலி பேரூராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவி சரவணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவேண்டும். டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துதல், பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com