நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
Published on

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் மற்றும் சாலை வசதியை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பழுதடைந்த பள்ளிக்கட்டிடம், அங்கன்வாடி மையம் ஆகியவற்றை சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து மழைக்காலங்களில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com