சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் புதிய ஏ.சி. மின்சார ரெயில்

திருவள்ளூர், ஆவடி திருநின்றவூர், அம்பத்தூர் வழியாக இந்த ரெயில் இயக்கப்பட உள்ளன.


சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் புதிய ஏ.சி. மின்சார ரெயில்
புதிய ஏ.சி. மின்சார ரெயில்
Published on

சென்னை,

அரக்கோணத்திற்கு புதிய ஏ.சி.மின்சார ரெயில் ஒரு வாரத்தில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது. முற்றிலும் குளிர்சாதன வசதி உள்ள ரெயிலுக்கு ஆரம்பக் கட்டத்தில் பயணிகளிடம் அதிக வரவேற்பு இல்லை. ஆனால் தற்போது இந்த ஏ.சி. ரெயிலில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

குறிப்பாக அரசு தனியார் அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வேலைக்கு வரவும் அவர்கள் பணி முடிந்து வீடு செல்லவும் இந்த ரெயில் வசதியாக உள்ளது.

ஒரு மின்சார ஏசி ரெயில் பெரம்பூரில் தயாரிக்கப்பட்டு தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ரெயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

புதிய ஏ.சி. மின்சார ரெயில் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை இயக்குவதற்கு திட்ட மிடப்பட்டுள்ளது அதற்கான கால அட்டவணை தயாரித்து வைத்து ரெயில்வே அனுப்பப்பட்டுள்ளது.

திருவள்ளூர், ஆவடி திருநின்றவூர், அம்பத்தூர் வழியாக இந்த ரெயில் இயக்கப்பட உள்ளன. புறநகர் பகுதி மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக அரக்கோணத்திற்கு விடப் படுகிறது. அரசுக அலுவல வேலை நேரத்தை கணக் கிட்டு இயக்கவும் அட்ட வணை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் ஏ.சி. மின்சார ரெயில் பொதுமக்கள் பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com