புதிய மின்மாற்றி அமைப்பு

மன்னார்புரத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
புதிய மின்மாற்றி அமைப்பு
Published on

இட்டமொழி:

மன்னார்புரத்தில் குறைந்தழுத்த மின்வினியோக குறைபாட்டை சரி செய்யும் வகையில், மின்சார வாரியம் சார்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. சங்கனாங்குளம் பஞ்சாயத்து தலைவர் எஸ்.சின்னத்தம்பி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் நல்லாசிரியர் அகஸ்டின் கீதராஜ் முன்னிலை வகித்தார். மன்னார்புரம் பங்குத்தந்தை எட்வர்ட் அடிகளார் தொடங்கி வைத்தார்.

வள்ளியூர் மின்வாரிய செயற்பொறியாளர் வளன்அரசு, திசையன்விளை உதவி செயற்பொறியாளர் பத்மகுமார், இட்டமொழி இளநிலை மின் பொறியாளர் சங்கீதா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜம்மாள், ஆசிரியர் ஜஸ்டின் கிளாடியோ, ஊராட்சி செயலர் நம்பி உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com