புதிய மின்மாற்றி அமைப்பு

கிருஷ்ணாபுரத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
புதிய மின்மாற்றி அமைப்பு
Published on

இட்டமொழி:

பாளையங்கோட்டை வடக்கு வட்டாரம் நொச்சிக்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது கிருஷ்ணாபுரம் பாத்திமா நகர் பகுதி. இங்குள்ள பொதுமக்கள் சீரான மின்சார வினியோகம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதை அறிந்த எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் சீரான மின் வினியோகம் கிடைக்கும் வகையில், புதிய மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி நேற்று பாத்திமா நகர் பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, அதன் சேவை தொடக்க விழா நடைபெற்றது. புதிய டிரான்ஸ்பார்மரை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பேசினார். விழாவில் நெல்லை நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துக்குட்டி, உதவி செயற்பொறியாளர்கள் சார்லஸ் நல்லதுரை, சங்கர், உதவி மின் பொறியாளர்கள் ஜன்னத்துல் சிபாயா, செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் பாளையங்கோட்டை மகாத்மா காந்திஜி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்க அலுவலகத்தில் பணியாளர்களை எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். அந்த பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com