

கடையம்:
தென்காசி கோட்டம், சுரண்டை உபகோட்டம், ஆவுடையானூர் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட புலவனூர் கிராமப்பகுதியில் புதிய மின்மாற்றி ரூ.9,30,730 செலவில் அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நடந்தது. தென்காசி செயற்பொறியாளர் (வினியோகம்) கற்பகவிநாயக சுந்தரம் தலைமை தாங்கினார். கோட்ட உதவி செயற்பொறியாளர்கள் ராஜசேகர், கலா, ஆகியேர் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மின்மாற்றி கொண்டு வரப்பட்டது. விழாவில் ஆவுடையானூர் உதவி பொறியாளர் ஷேக் உமர் பரூக், கீழப்பாவூர் உதவி மின் பொறியாளர் ஜமுனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.