புதிய பாரத எழுத்தறிவு இயக்கம்

கொரடாச்சேரி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு இயக்கம் நடந்தது.
புதிய பாரத எழுத்தறிவு இயக்கம்
Published on

கொரடாச்சேரி:

கொரடாச்சேரி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு இயக்கம் 31 மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் 2027 வரையில் செயல்படுத்தப்படுகிறது. கொரடாச்சேரி ஒன்றியத்தில் அம்மையப்பன் மற்றும் பட்டுடையானிருப்பு மையங்களை திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயா பார்வையிட்டு ஆய்வு செய்தார். கற்போர்களிடம் மையத்தில் கற்ற விவரங்களை கேட்டறிந்தார். மேலும் கற்போரின் பாடல் திறன், கோலப் போட்டிகள் வைத்து கற்போரை உற்சாகப்படுத்தினார். இந்த ஆய்வின் போது மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், மாவட்டத் திட்ட அலுவலர் பாலசுப்ரமணியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிருந்தாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com