புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வுத்தாள் மதிப்பிடும் பணி

கொள்ளிடம் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வுத்தாள் மதிப்பிடும் பணி நடந்தது
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வுத்தாள் மதிப்பிடும் பணி
Published on

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஒன்றியத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் முற்றிலும் எழுத படிக்க தெரியாத15 வயது முதல் 90 வயது வரை உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு 38 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்தில் சுமார் 768 பேர் பயின்று வருகின்றனர். இவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழ் மற்றும் அடிப்படை கணிதம் ஆகியவற்றிற்கு தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி கொள்ளிடம் வட்டார வளமயத்தில் மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி மேற்பார்வையில் நடந்தது. இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் பாக்கியலட்சுமி, ஐசக் ஞானராஜ், கவிதா மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com