பேராசிரியர்களை தேர்வு செய்ய புதிய வாரியம்; அரசுக்கு, உயர்கல்வித்துறை பரிந்துரை

உயர்கல்வித் துறைக்கு கீழ் வரும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு புதிய வாரியம் மூலம் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும் என உயர்கல்வித் துறை சார்பில் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
பேராசிரியர்களை தேர்வு செய்ய புதிய வாரியம்; அரசுக்கு, உயர்கல்வித்துறை பரிந்துரை
Published on: 

சென்னை,

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. அதேபோல், உயர்கல்வித் துறையில் உதவி பேராசியர்கள், அரசு பாலிடெக்னிக், சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள், இளநிலை, முதுநிலை மற்றும் மூத்த விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களையும் இந்த வாரியமே தேர்வு நடத்தி நிரப்புகிறது.

எனவே உயர்கல்வித் துறைக்கு கீழ் வரும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு புதிய வாரியம் மூலம் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும் என உயர்கல்வித் துறை சார்பில் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு உயர்கல்வி தேர்வு வாரியம் (எச்.இ.ஆர்.பி.) என பெயரிடவும் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி அரசு இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X