விருகம்பாக்கம் -அரும்பாக்கம் கால்வாயின் குறுக்கே சென்னை மெட்ரோ நிறுவனம் சார்பில் புதிய பாலம்

தனியார் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் நேற்று கையெ ழுத்திட்டனர்
விருகம்பாக்கம் -அரும்பாக்கம் கால்வாயின் குறுக்கே சென்னை மெட்ரோ நிறுவனம் சார்பில் புதிய பாலம்
Published on

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள விருகம்பாக்கம்-அரும்பாக்கம் கால்வாயின் குறுக்கே உள்ள பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு ரூ.12.31 கோடி மதிப்பில் வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் முன்னிலையில், சென்னை மெட்ரோ நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டோன் எலியேசர் மற்றும் தனியார் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் நேற்று கையெ ழுத்திட்டனர்.

இந்த திட்டத்தை 180 நாட்களுக்குள் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு பொதுமக்களுக்கான போக்குவரத்து வசதியையும், பயண எளிமையையும் கணிசமாக மேம்படுத் துவதோடு, அந்த பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலையும் குறைக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பாலம் சாலைப் பாது காப்பை அதிகரிக்கவும், சுற்றியுள்ள குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிக ளுக்கு இடையே தடையற்ற இணைப்பை வழங்குவதையும் நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com