'வருவாய்த் துறை சார்பில் ரூ.16.06 கோடியில் புதிய கட்டிடங்கள்' - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்


வருவாய்த் துறை சார்பில் ரூ.16.06 கோடியில் புதிய கட்டிடங்கள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
x

வருவாய்த் துறை சார்பில் ரூ.16.06 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

வருவாய்த் துறை சார்பில் 16.06 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள் மற்றும் 25 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.1.2025) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் 8 கோடியே 58 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் 7 கோடியே 47 லட்சத்து 21 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 25 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

வருவாய்த்துறை, மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது.

இத்துறையின் பணிகளை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் 4 கோடியே 57 லட்சத்து 42 ஆயிரம் செலவிலும், நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் 4 கோடியே 97 ஆயிரம் செலவிலும், கட்டப்பட்டுள்ள 2 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள்;

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் - அலங்காநல்லூர் மற்றும் திருமங்கலம் வட்டம்- திருமங்கலம், நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம் - வேளாங்கண்ணி, தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம் - கோடாங்கிபட்டி, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம் - புத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் - சூளகிரி, ஊத்தங்கரை வட்டம் - கல்லாவி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் - செங்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் - வல்லநாடு, கறம்பக்குடி வட்டம் - மலையூர், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் - திருவெண்காடு, திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் - கரடிவாவி, கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம்- வரப்பட்டி,

சென்னை மாவட்டம் – மதுரவாயல் வட்டம்- மதுரவாயல், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம் - பள்ளக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் வட்டம் - மணியாச்சி, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம் - முக்கூடல், மானூர் வட்டம் - தாழையூத்து, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம்- சுங்குவார்சத்திரம், இராமநாதபுரம் மாவட்டம், கீழ்க்கரை வட்டம் - திருப்புலானி, திருவாடானை வட்டம் - திருவாடானை, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம் - சிங்கம்புணரி, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் - துவரங்குறிச்சி, கும்பகோணம் வட்டம் - தேவனாம்சேரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் - திருப்போரூர் வட்டம் - திருப்போரூர் ஆகிய இடங்களில் 7 கோடியே 47 லட்சத்து 21 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 25 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்;

என மொத்தம் 16 கோடியே 5 லட்சத்து 60 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடிங்கள் மற்றும் 25 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் ஆகியவற்றை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், பெ.அமுதா, இயக்குநர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) க.வீ.முரளீதரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story