

சென்னை,
அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படுவதுடன், தீக்காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவையான தோல் சிகிச்சை மற்றும் மாற்று சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் வகையில் தோல் வங்கி (SKIN BANK) அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, சிவகாசி மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
பட்டாசுத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு அவசர காலங்களில் தரமான மற்றும் விரைவான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த முக்கியமான மருத்துவ வசதிகள் உருவாக்கப்படுகின்றன.
சிவகாசி மக்களின் நீண்ட நாள் மருத்துவத் தேவையை உணர்ந்து, தீக்காய சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் தோல் வங்கி போன்ற உயிர்காக்கும் வசதிகளை ஏற்படுத்த முன்வந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் அண்ணன் விஜய் அவர்களுக்கு, சிவகாசி தொகுதி மக்களின் சார்பாகவும், பட்டாசுத் தொழிலாளர்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் உயிர், பாதுகாப்பு, நலன் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு செயல்படும் இந்த மக்கள் நல அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் சிவகாசியின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான ஒரு முக்கியமான முன்னெடுப்பு! மக்கள் நலனே முதன்மை! சிவகாசியின் பாதுகாப்பே எங்கள் பொறுப்பு!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.