நாங்குநேரி மூலைக்கரைப்பட்டி பஸ் நிலையம்; அமைச்சர் கே.என்.நேரு தகவல்

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகர் கேள்வி எழுப்பினார்.
நாங்குநேரி மூலைக்கரைப்பட்டி பஸ் நிலையம்; அமைச்சர் கே.என்.நேரு தகவல்
Published on

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தற்போது நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அதில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உள்பட்ட மூலைக்கரைப்பட்டியில் இந்த ஆண்டு பஸ் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று அந்த தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகர் கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, நாங்குநேரி தொகுதியில் பஸ் நிலையம் அமைப்பதற்கு எந்த ஒரு தடையும் இல்லை. பஸ் போகும் பாதை சரியாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள நெடுஞ்சாலை துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். ஏற்கனவே பைபாஸ் சாலை போடப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டே மூலைக்கரைப்பட்டியில் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என கூறினார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com