ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய பெட்டிகள் இணைப்பு

ஈரோடு - சென்னை சென்ட்ரல் இடையே ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய பெட்டிகள் இணைப்பு
Published on

சென்னை,

ஏற்காடு எக்ஸ்பிரஸ்

ஈரோட்டில் இருந்து தினசரி இரவு 9.45 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப் பட்டு சேலம், ஜோலார் பேட்டை வழியாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு மறுநாள் காலை 4.25 மணிக்கு சென்று சேருகிறது. இது போல் அங்கிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டுக்கு மறுநாள் காலை 5.50 மணிக்கு வந்து சேருகிறது.

ஈரோட்டில் இருந்து சென்னைக்கு புறப்படும் ஒரே ரெயிலாக இது உள்ளது. ஈரோடு, நாமக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சென்னைக்கு செல்ல முதல் தேர்வாக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலையே தேர்ந்து எடுக்கிறார்கள்.

நவீன பெட்டிகள்

இந்த நிலையில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலின் அனைத்து வழக்கமான பழைய பெட்டிகளும் மாற்றப்பட்டு புதிய நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஏ.சி. முதல் வகுப்பு. ஏ.சி.2-ம் வகுப்பு அடுக்கு-1, ஏ.சி.2-ம் வகுப்பு அடுக்கு-2, ஏ.சி.3-ம் வகுப்பு அடுக்கு-3, படுக்கை வகுப்பு-10, பொது 2-ம் வகுப்பு-4, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியுடன் கூடிய சரக்கு பெட்டி-1, மின்சார பெட்டி-1 என ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் வழக்கமான பெட்டிகளுக்கு பதிலாக எல்.எச்.பி. (லிங்கே ஹாப்மேன் புஷ்) எனப்படும் ஜெர்மனி தொழில் நுட்ப பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்த பெட்டிகள் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக பொருத்தப்பட்டுள்ள எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட்ட ரெயிலை வழக்கமான வேகத்தைவிட அதிக வேகத்தில் இயக்க முடியும். வழக்கமான பெட்டிகளை விட இது எடை குறைந்ததாக இருக்கும். அழகியல் ரீதியாகவும் சிறந்த உட்புறங்களை கொண்டதாக இருக்கும். குறைந்த பராமரிப்பு செலவு கொண்டது. ஒவ்வொரு பெட்டியிலும் அதிக வேகத்தில் திறமையாக பிரேக்கிங், மேம்பட்ட நியூமேடிக் டிஸ்க் பிரேக் அமைப்பு மற்றும் மாடுலர் உட்புறங்கள் உள்ளன. இந்த பெட்டிகளில் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு இருப்பதால் பயணிகளுக்கு அசதி ஏற்படாது. பெட்டிகளின் உட்புறம் தீயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. குளிரூட்டும் அமைப்பு அதிக திறன் கொண்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com