ரூ.42 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம்; கலெக்டர் அடிக்கல் நாட்டினார்

கடையம் அருகே கோவிந்தபேரி பஞ்சாயத்தில் ரூ.42 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
ரூ.42 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம்; கலெக்டர் அடிக்கல் நாட்டினார்
Published on

கடையம்:

கடையம் யூனியன் கோவிந்தப்பேரி ஊராட்சியில் ஒரு லட்சம் பனை மரங்கள் வளர்ப்பு திட்டம் மற்றும் ராஜாங்கபுரத்தில் ரூ.42 லட்சத்தில் இரண்டு அடுக்குமாடி சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா, கோவிந்தபேரி மற்றும் ராஜாங்கபுரத்திற்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் திறப்பு விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் முன்னிலை வகித்தார். இந்திய பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினரும், சோகோ நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கோவிந்தபேரி பஞ்சாயத்து தலைவர் டி.கே.பாண்டியன் வரவேற்றார். கடையம் யூனியன் ஆணையாளர் திருமலை முருகன், பஞ்சாயத்து தலைவர்கள் கீழக்கடையம் பூமிநாத், ஏ.பி.நாடானூர் அழகுதுரை, மந்தியூர் கல்யாணசுந்தரம், பொட்டல்புதூர் கணேசன், திருமலையப்பபுரம் மாரியப்பன், கீழ ஆம்பூர் மாரிசுப்பு, ரவணசமுத்திரம் முகமது உசேன், கோவிந்தபேரி பஞ்சாயத்து துணைத்தலைவர் இசேந்திரன், ஊராட்சி செயலர் மூக்காண்டி, மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் வி.பி.ராமையா, கடையம் தெற்கு வட்டாரத்தலைவர் முருகன், ஊர் தலைவர்கள் சிங்கக்குட்டி, தட்சிணாமூர்த்தி, சுப்பையா, கிருஷ்ணன், கணேசன், நாகராஜன், மாணிக்கம், மாரியப்பன், பூலோக பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் மாவட்ட கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முதற்கட்டமாக 10,008 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com