

சென்னை,
பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகள் தங்களின் தள்ளுபடித் தொகை நீங்கலாக மீதமுள்ள நிலுவைக் கடன் தொகையை வரும் 30-ந்தேதிக்குள் திருப்பிச் செலுத்தி, புதிய பயிர்க்கடன் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
நடப்பாண்டில் 5 லட்சத்து 70 ஆயிரத்து 942 விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரத்து 190 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. விவசாயிகளின் வசதிக்காக வரும் 28 மற்றும் 29-ந் தேதிகளில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்களிலும் கூட்டுறவுக்கடன் வழங்கும் சங்கங்கள் செயல்படும். எனவே பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது தள்ளுபடி தொகை நீங்கலாக மீதமுள்ள நிலுவைக்கடன் தொகையை செலுத்தி, புதிய பயிர்க்கடன்களை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, அந்தந்த மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளர்களை தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ்அப் உதவி எண் 98400 65423 மூலம் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தத் தகவலை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.