சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய டீன் பொறுப்பேற்பு

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய டீனாக காளிதாஸ் தத்தாத்ரேயா சவான் பொறுப்பேற்று கொண்டார்.
சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய டீன் பொறுப்பேற்பு
Published on

சென்னை,

சென்னை கே கே நகர் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய டீனாக டாக்டர் காளிதாஸ் தத்தாத்ரேயா சவான் 27-ந் தேதி பொறுப்பேற்று கொண்டார். 53 வயதான அவர், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். மருத்துவமனை கல்வி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் கொண்ட அவர், தடய அறிவியலில் முதுநிலை மருத்துவப்பட்டம் பெற்றவர் ஆவார்.

நாசிக்கில் உள்ள மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், தேர்வு கட்டுப்பாட்டாளராகவும் நிதி மற்றும் கணக்கு அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். மருத்துவர், நோயாளி உறவுக்கான மேலாண்மை படிப்பில் திலக் மகாராஷ்டிரா வித்யா பீடத்தின் பிஎச்டி பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.

ஐஐஎம் உட்பட பல்வேறு கல்வி நிறுவன படிப்புகளையும் நிறைவு செய்துள்ள அவர், மருந்துக்கு அப்பால் என்னும் நூலை எழுதியுள்ளார். மருத்துவ துறை மற்றும் சுகாதார அறிவியல் தொடர்பானவர்களுக்கு இந்த நூல் பெரிதும் பயன்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com