புதிய மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகம்

மயிலாடுதுறையில் புதிய மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தை கலெக்டர் மகாபாரதி திறந்து வைத்தார்.
புதிய மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகம்
Published on

மயிலாடுதுறை;

மயிலாடுதுறையில் புதிய மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தை கலெக்டர் மகாபாரதி திறந்து வைத்தார்.

கூட்டுறவு ஒன்றிய அலுவலகம்

நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் தமிழகத்தில் 38- வது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாகையில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் திறக்கப்பட்டது.கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி புதிய மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் கலெக்டர் மகாபாரதி கூறியதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய கூட்டுறவு ஒன்றியம் ரூ.15 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்ததன் பேரில் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு தனியாக கூட்டுறவு ஒன்றியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

214 கூட்டுறவு சங்கங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 16 பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் நாணய சங்கம், ஒரு நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, 2 கூட்டுறவு நகர வங்கிகள், 2 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், 2 தொடக்க கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கிகள், 1 பிரதம கூட்டுறவு பண்டகசாலை, 7 மாணவர்கள் கூட்டுறவு பண்டகசாலைகள், ஒரு ஒப்பந்த தொழிலாளர் கூட்டுறவு சங்கம், 1 சிற்றுண்டி பணியாளர் கூட்டுறவு சங்கம், ஒரு குத்தகைதாரர் சங்கம், 61 பால்வள கூட்டுறவு சங்கங்கள், 53 மீனவ கூட்டுறவு கடன் சங்கங்கள், ஒரு கூட்டுறவு பட்டு வளர்ச்சி சங்கம், ஒரு கோழி வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் உள்பட மொத்தம் 214 கூட்டுறவு சங்கங்கள் இந்த ஒன்றியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வாறு கலெக்டர் மகாபாரதி கூறினா. விழாவில், உதவி கலெக்டர் யுரேகா, வேளாண்மைத் துறை இணை இயக்குனர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள வினாயகன் அமல்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி, நகரசபை தலைவர்கள் செல்வராஜ், துர்காபரமேஸ்வரி, குத்தாலம் ஒன்றியக்குழுத் தலைவர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com