போக்குவரத்து கழகங்களுக்கு புதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் தேர்வு- அமைச்சர் சிவசங்கர்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு எடுக்கப்படுவார்கள் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
போக்குவரத்து கழகங்களுக்கு புதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் தேர்வு- அமைச்சர் சிவசங்கர்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் பல வழித்தடங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டது தொடர்பாக சட்டமன்றத்தில் நேற்று உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்து பேசியதாவது:-

கொரோனா காலத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. அதற்கு கொரோனா பரவல் மட்டும் காரணம் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் போதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் இல்லாமல் பல வழித்தடங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு புதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு எழுத்து தேர்வு முடிவு பெற்றுள்ளது. நேர்காணலும் முடிந்துள்ளது. அவர்கள் விரைவில் பணி அமர்த்தப்பட உள்ளனர். அடுத்ததாக மற்ற போக்குவரத்து கழகங்களுக்கு டிரைவர்கள், கண்டக்டர்களை பணிக்கு எடுப்பதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு எடுக்கப்பட்டு நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com