

ராமநாதபுரம்,
ராமேசுவரம் கோவிலில் ஏற்கனவே 'ராமலட்சுமி' என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவிலுக்கு புதிதாக 'சிவா' என்ற 5 வயது நிரம்பிய குட்டி ஆண் யானை கொண்டுவரப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் இருந்து பிரத்யேக லாரி மூலம் புறப்பட்ட இந்த யானை, சுமார் 10 நாட்கள் தொடர் பயணத்திற்குப் பிறகு பாதுகாப்பாக ராமேஸ்வரம் வந்தடைந்தது.