சென்னையில் பயணிகளுக்கு புதிய வசதி: 11 இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்

தொடர்ந்து இதுபோன்ற குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் தேவைப்படும் இடங்களில் பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும்.
குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சியில் பயணிகளுக்கு புதிய வசதி: 11 இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மக்களுக்கும், பயணிகளுக்கும் உரிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைப்பதற்கான முன்னோட்டமாக தற்போது பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் அனைத்து வசதிகளுடன் கூடிய 11 குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படவுள்ளது.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் அ. அமல்ராஜ், ஆகியோர் முன்னிலையில் பங்களிப்பாளர்களுடன் இன்று ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் மேற்கொள்ளப்பட்டது.

குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுந்தங்கள் அமைக்கப்படவுள்ள விவரம்

வ. எண் நிறுவனங்களின் பெயர் மண்டலங்கள் இடங்கள்

1. அப்பல்லோ மருத்துவமனை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அண்ணாசாலை தேனாம்பேட்டை மயிலாப்பூர் பேருந்து நிறுத்தம்

2. காவேரி மருத்துவமனை கோடம்பாக்கம் ஜவஹர்லால் நேரு சாலை, வடபழனி

3. குருநானக் கல்லூரி அடையாறு விஜயநகர் பேருந்து முனையம், வேளச்சேரி

4. சிம்ஸ் மருத்துவமனை கோடம்பாக்கம் வடபழனி பேருந்து நிறுத்தம் அருகில், சிம்ஸ் மருத்துவமனைக்கு வரும் வழி கோடம்பாக்கம் வடபழனி பேருந்து நிறுத்தம் அருகில், சிம்ஸ் மருத்துவமனையிலிருந்து செல்லும் வழி

5. ரோகினி ஹோட்டல்ஸ், கிண்டி அடையாறு சின்னமலை, கிண்டி

6. எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனை கோடம்பாக்கம் ஆவிச்சி பள்ளி, ஆற்காடு சாலை ஆலந்தூர் ஆலந்தூர் மெட்ரோ

7. ஃப்ரையர் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக் இராயபுரம் எழும்பூர் வடக்குப் பகுதி இராயபுரம் எழும்பூர் தெற்குப் பகுதி

இந்த குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் மேற்கொள்ளப்படும் வசதிகள்

1. குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை (Air Conditioned Waiting Hall)

2. கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV Camera)

3. வைஃபை வசதிகள் (Wi-fi facility)

4. சாய்வு தளப் பாதை (Accessible ramp, preferably integrated with the footpath)

5. பேருந்து வழித்தடத் தகவல்கள் (Bus Route information)

6. மின்விளக்கு வசதி (Lighting)

7. வெயில் தாங்கும் கூரை அமைப்பு (Puff panel roofing)

8. உறுதியான பாதுகாப்பான கண்ணாடி (Toughened / laminated Safety glass)

9. USB சார்ஜிங் வசதிகள் (USB charging points)

தொடர்ந்து இதுபோன்ற குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் தேவைப்படும் இடங்களில் பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும்.

இந்நிகழ்வில், சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையாளர் பா. சாமுண்டீஸ்வரி, இணை ஆணையாளர் (பணிகள்) சரவணன், தலைமைப் பொறியாளர் (பொது) பி.சங்கரவேலு, கண்காணிப்புப் பொறியாளர் (பேருந்து சாலைகள்) எம்.பழனி, பங்களிப்பாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com