சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணதாரர் பெயர், டோக்கன் எண் அறிவிக்கும் புதிய வசதி

சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணதாரர் பெயர், டோக்கன் எண் அறிவிக்கும் புதிய வசதி செய்யப்பட உள்ளது.
சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணதாரர் பெயர், டோக்கன் எண் அறிவிக்கும் புதிய வசதி
Published on

சென்னை,

வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் 2020-21-ம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, வணிகவரி மற்றும் பதிவு அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அவர், அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பொருத்தப்பட்டுள்ள காட்சிக் கருவியில் (டோக்கன் டிஸ்பிளே யுனிட்) அடையாளவில்லை எண்ணோடு ஆவணதாரர்களின் பெயரும் காட்சிப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

அதனடிப்படையில் மேம்படுத்தப்பட்ட காட்சிக்கருவிகளை அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் பொருத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையால் பதிவின்போது ஆவணதாரர்களின் வரிசைக்கிரம எண்ணோடு அவர்களின் பெயரும் அறிவிக்கப்படும். இதன் மூலம் சரியான முன்னுரிமை உறுதிப்படுத்தப்படுவதுடன், பதிவு அலுவலகங்களில் கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும். பதிவு செய்யும் பொதுமக்களுக்கு வெளிப்படையான குழப்பமற்ற வரிசைக் கிரமத்தை கடைபிடிக்க இது ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com