வெளிநாட்டில் வசிப்போர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் வகையில் புதிய வசதி - மின்வாரியம் ஏற்பாடு

வெளிநாட்டில் வசிப்போருக்காக ஆதார் எண்ணை இணைக்கும் இணையதள பக்கத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வசிப்போர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் வகையில் புதிய வசதி - மின்வாரியம் ஏற்பாடு
Published on

சென்னை,

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் மூலமாகவும், இணையதளம் வாயிலாகவும் மின் இணைப்பை ஆதாருடன் இணைக்கலாம் என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டின் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் எவ்வாறு இணைப்பது என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆதார் எண்ணை இணைக்கும் இணையதள பக்கத்தில் 4-வது ஆப்ஷனாக என்.ஆர்.ஐ. பதிவிற்கான புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டில் வசிப்பவர்களும் தங்கள் வீட்டின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com