திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் தற்கொலை

‘சமையல் செய்ய கற்றுக்கொள்’ என்று தாய் கண்டித்ததால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் தற்கொலை
Published on

இட்டமொழி:

'சமையல் செய்ய கற்றுக்கொள்' என்று தாய் கண்டித்ததால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுப்பெண்

நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள கீழகோடன்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்த குப்புராஜ் மனைவி கனகமணி. இவர்களுக்கு 2 மகன்களும், கிறிஸ்டில்லா மேரி (வயது 19) என்ற மகளும் உண்டு. குப்புராஜ் ஏற்கனவே இறந்து விட்டார்.

இந்த நிலையில் கிறிஸ்டில்லா மேரிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகிற 1-ந் தேதி நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்தனர்.

கிறிஸ்டில்லா மேரி அடிக்கடி செல்போன் பார்த்துக் கொண்டு வீட்டு வேலை எதுவும் செய்யாமல் இருந்து வந்தார்.

விஷம் குடித்து மயங்கினார்

இந்த நிலையில் உனக்கு திருமணம் நடக்க உள்ளது. அதற்குள் சமையல் வேலைகளை கற்றுக்கொள் என்று கிறிஸ்டில்லா மேரியை அவரது தாய் கண்டித்துள்ளார்.

இதனால் வதனை அடைந்த கிறிஸ்டில்லா மேரி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்க பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார்.

பின்னர் வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக முனைஞ்சிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பரிதாப சாவு

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிறிஸ்டில்லா மேரி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது அண்ணன் முத்தமிழ் பீட்டர் மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com