குமரியில் புதிதாக 45 பேருக்கு கொரோனா

குமரியில் புதிதாக 45 பேருக்கு கொரோனா
குமரியில் புதிதாக 45 பேருக்கு கொரோனா
Published on

நாகர்கோவில்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த தமிழக அரசு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தொற்று பரிசோதனை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 895 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஆண்கள் 16 பேரும், பெண்கள் 29 பேரும் என மொத்தம் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆஸ்பத்திரி மற்றும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com