தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் - ஐகோர்ட்டில் டி.ஜி.பி. தரப்பில் தகவல்

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்ட வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் - ஐகோர்ட்டில் டி.ஜி.பி. தரப்பில் தகவல்
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு, ரவுடிகள் தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவம் வருத்தம் அளிக்கிறது. தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்க சென்ற போது உயிரிழந்த போலீஸ்காரர் சுப்பிரமணியன் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்?, இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்படுவோர் குடும்பத்திற்கு அரசியல் கட்சிகள் உதவ வேண்டும்.

ரவுடிகள் இறக்க நேரிடும் போது காட்டப்படும் அக்கறையை போலீசார் பாதிக்கப்படும்போது, மனித உரிமை ஆணை யம் ஏன் காட்டுவதில்லை?. ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். ரவுடிகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டி.ஜி.பி., 2 வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்தநிலையில் மீண்டும் அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஜி.பி. தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்ட வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், புதிய சட்ட வரைவு மசோதா எப்போது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது? என்பது குறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com