புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா

புதிய பயணிகள் நிழற்குடையை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா
Published on

திருப்புவனம் யூனியனை சேர்ந்த மேலவெள்ளுர் கிராமத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து பயணியர் நிழற்குடை அமைக்க ரூ.4.50 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அந்த பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் தேவதாஸ் வரவேற்றார். புதிய பயணிகள் நிழற்குடையை தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும், கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் நகர் செயலாளர் நாகூர்கனி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஈஸ்வரன், சுப்பையா, ராமு, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் சேகர், பேரூராட்சி துணை தலைவர் ரகமத்துல்லாகான், ஒன்றிய நிர்வாகிகள் மடப்புரம் மகேந்திரன், இளங்கோவன், சக்திமுருகன், கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கோபால் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com