

சென்னை,
காரைக்கால் - மயிலாடுதுறை இடையே புதிய பயணிகள் ரெயில் வரும் மே மாதம் 20-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
காரைக்காலில் இருந்து பகல் 12.45 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் மதியம் 2.15 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், மே மாதம் 21-ந் தேதி மயிலாடுதுறையில் இருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் பகல் 11.05 மணிக்கு காரைக்காலை சென்றடைகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.