கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது
x

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது.

சென்னை,

தாம்பரம் மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கலைஞர் நூற்றாண்டுப் பேருந்து நிலையம், கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் அங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

பயணிகளின் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறை ஆகியவற்றை உறுதி செய்யும் பொருட்டு, காவல் துறையினர் பேருந்து நிலையத்தில் பணியமர்த்தப்பட்டனர். G.O. (MS) No.170, Home (Police XIV) Department, dated 04.03.2024 , . குற்றப் பிரிவு ஆகிய இரு பிரிவுகளையும் உள்ளடக்கிய T-21 கிளாம்பாக்கம் காவல் நிலையம், பேருந்து முனையத்திற்குள் தற்காலிகக் கட்டிடத்தில் இயங்கி வந்தது.

இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA), கிளாம்பாக்கத்தில் ஒரு நிரந்தரக் காவல் நிலையக் கட்டிடத்தைக் கட்டியுள்ளது. இக்கட்டிடம் 05.08.2025 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.

தற்போது, இந்த புதிய கட்டிடம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, இதில், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு, குற்றப் பிரிவு மற்றும் கிளாம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையம் ஆகிய முக்கியப் பிரிவுகள் இன்று (17.09.2025) முதல் பயன்பாட்டிற்கு வந்து முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story