சென்னை மாநகரில் புதிய திட்டங்கள்; கமிஷனர் சமீரன் ஆலோசனை

சென்னை மாநகரில் புதிய திட்டங்கள் நகர்ப்புற சவால் நிதியின் கீழ் மேற்கொள்வதற்கு ஏதுவாக விரிவான திட்ட அறிக்கை தயாரித்திட அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் சமீரன் அறிவுறுத்தினார்.
கமிஷனர் சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சியில் புதிய திட்டங்கள் மேற்கொள்வது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

கமிஷனர் சமீரன் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் சமீரன் தலைமையில், நகர்ப்புற சவால் நிதியின் கீழ் (Urban Challenge Fund) பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிய திட்டங்கள் மேற்கொள்வது தொடர்பாக கலந்தாலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கவிதா ராமு, இணை ஆணையாளர் (பணிகள்) சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நீர்நிலைகள் மேம்பாடு

இந்த கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியில் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் மேம்பாடு, பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகள், பூங்கா மேம்பாடு (Blue Green Infrastructure), தண்டையார்பேட்டை - வண்ணாரப்பேட்டை - ராயபுரம், அடையாறு - பெசன்ட்நகர், தியாகராயநகர் - தேனாம்பேட்டை, ராயப்பேட்டை - திருவல்லிக்கேனி உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டங்கள் (Area Developement - Neighbourhood Developement), விபத்தினைத் தடுத்து சீரான போக்குவரத்திற்கு ஏதுவாக நடைபாதைகள், சாலை சந்திப்புகள் மற்றும் சாலை வளைவுகள் மேம்பாடு (Pedestrian Footpath & Junction Improvements), பெசன்ட்நகர், திருவான்மியூர், பாலவாக்கம் கடற்கரை மேம்பாடு (Beach Front) உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த திட்டங்களை நகர்ப்புற சவால் நிதியின் (Urban Challenge Fund) கீழ் மேற்கொள்வதற்கு ஏதுவாக விரிவான திட்ட அறிக்கை தயாரித்திட அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com