

சென்னை,
தமிழகத்தில் புதிய ரெயில் வழித்தடங்கள் கட்டமைப்பு குறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் ரெயில் போக்குவரத்தின் தேவையை கருத்தில் கொண்டு, இரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவை நேரில் சந்தித்து, தமிழகத்தில் சில புதிய ரெயில் வழித்தடங்கள் கட்டமைப்பது குறித்து வலியுறுத்தியிருந்தேன்.
அதன்படி, தமிழகத்தில் ஆறு முக்கியமான ரெயில் வழித்தடங்களுக்கான இறுதி ஆய்வறிக்கையை (Final Location Survey) தயாரிக்க உத்தரவிட்டுள்ளது.
1) சென்னை- அரக்கோணம் (5 மற்றும் 6 ஆம் வழித்தடம்)
2) அரக்கோணம்-ரேணிகுண்டா (5 மற்றும் 6 ஆம் வழித்தடம்)
3) சென்னை-குடூர் (5 மற்றும் 6 ஆம் வழித்தடம்)
4) விழுப்புரம்-திருச்சி-நாகர்கோயில் (3 மற்றும் 4 ஆம் வழித்தடம்)
5) பாலக்காடு-பொள்ளாச்சி-போத்தனுர் (2 ஆம் வழித்தடம்)
6) திருச்சி-காரைக்குடி-மானாமதுரை-மதுரை (2 ஆம் வழித்தடம்)
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் முன்னுரிமை அளித்து, ரெயில் கட்டமைப்புகளை அசுர வேகத்தில் மெருகேற்றிவரும் நமது பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்திய இரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவுக்கும், தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.