ரூ.10 லட்சத்தில் புதிய ரேஷன் கடை அடிக்கல் நாட்டு விழா

ரூ.10 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
ரூ.10 லட்சத்தில் புதிய ரேஷன் கடை அடிக்கல் நாட்டு விழா
Published on

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி முதலியார்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்ட இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கோட்டைவிளைபட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் அய்யனார்குளத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜையில் கலந்து கொண்டார். எம்.எல்.ஏ.வை அ.தி.மு.க. வார்டு செயலாளர் மோகன், வார்டு கவுன்சிலர் கிறாஸ் இமாக்குலேட் வரவேற்றனர்.

பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் டேவிட் டேனியல், அ.தி.மு.க. நகர செயலாளர் கண்ணன், மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவன்பாபு, அம்பை கவுன்சிலர் மாரிமுத்து, ஒன்றிய துணை செயலாளர் பிராங்ளின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com