புதிய பதிவு கட்டணம் நிர்ணயம்: அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை உயருகிறது

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பதிவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய பதிவு கட்டணம் நிர்ணயம்: அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை உயருகிறது
Published on

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 9 சதவீத தனிப்பதிவு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண சதவீதம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை உயர வாய்ப்புள்ளது.

உதாரணத்துக்கு ரூ.50 லட்சத்துக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும் நிலையில் விற்பனை பத்திரத்துக்காக நிர்ணயிக்கப்படும் கட்டணத்தில் 9 சதவீதம் மற்றும் கட்டுமான கட்டணமாக 4 சதவீதம் என தோராயமாக ரூ.2.35 லட்சம் செலுத்தினால் போதுமானதாக இருந்தது.

தமிழக அரசின் புதிய உத்தரவின்படி அடுக்குமாடி குடியிருப்பின் மொத்த விலையில் 9 சதவீத தனிப்பதிவு கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது ரூ.50 லட்சம் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்புக்கு 4.5 லட்சம் ரூபாய் அளவுக்கு தனிப்பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சரியான முறையில் கட்டணத்தை வசூலிக்கவும், முறைகேட்டை தடுக்கவும் இத்தகைய தனிப்பதிவு கட்டணம் விதிக்கப்படுவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைத்து சார் பதிவாளர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய கட்டண உயர்வால், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் விலை உயர இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com