

சென்னை,
சென்னை பெருங்குடி, துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, சோழிங் கநல்லூர் பகுதிகளில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் செயல் பட்டு வருகின்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் ஓ.எம்.ஆர். சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நெரிசலை குறைக்கவும், வாகன போக்குவரத்தை முறைப்படுத்தவும் போக்குவரத்து போலீசார் அதிரடி மாற்றங்களை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள புதிய போக்குவரத்து மாற்றங்கள் விவரம் வருமாறு:-
துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் மற்றும் பிள்ளையார் கோவில் தெருவில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கிச் செல்லும் வாக னங்கள், அப்பகுதியில் 'யூ-டர்ன்' செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் பெருங்குடி சுங்கச்சாவடி இருந்த பகுதி வரை சென்று, அங்கு யூ-டர்ன் எடுத்து சோழிங்கநல்லூர் நோக்கிச் செல்ல வேண்டும்.
அதேபோல், 200 அடி ரேடியல் சாலையில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் சீவரம் அருகே யூ-டர்ன் செய்ய அனுமதி இல்லை. அந்த வாகனங்களும் பெருங்குடி சுங்கச்சாவடி இருந்த பகுதிக்கு சென்று யூ-டர்ன் செய்து சோழிங்கநல்லூர் செல்ல வேண்டும். பெருங்குடி கந்தன்சாவடியில் இருந்து எஸ்.ஆர்.பி.டூல்ஸ் நோக்கி செல்லும் வாகனங்கள், உலக வர்த்தக மையம் அருகே யூ-டர்ன் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக பெருங்குடி சுங்கச்சாவடி வரை சென்று யூ-டர்ன் செய்து எஸ்.ஆர்.பி.டூல்ஸ் நோக்கிச் செல்ல வேண்டும்.
பெருங்குடி மற்றும் சீவரம் பகுதியில் இருந்து 200 அடி ரேடி யல் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், வழக்கம் போல் யூ-டர்ன் செய்து 200 அடி ரேடியல் சாலைக்கு செல்லலாம். இந்த அதிரடி மாற்றங்கள் மூலம் ஓ.எம்.ஆர். சாலையில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.