அதிமுகவில் பா.வளர்மதி, வைகைச் செல்வனுக்கு புதிய பொறுப்பு - ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு

அதிமுகவில் பா.வளர்மதி, வைகைச் செல்வனுக்கு பொறுப்புகளை வழங்கி ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.
அதிமுகவில் பா.வளர்மதி, வைகைச் செல்வனுக்கு புதிய பொறுப்பு - ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு
Published on

சென்னை,

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கழக இலக்கிய அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திருமதி பா. வளர்மதி அவர்களும், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் முனைவர் வைகைச்செல்வன் அவர்களும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகளாகவும்; சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகவும் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

கழக மகளிர் அணி நிர்வாகிகள்:

செயலாளர்- திருமதி பா. வளர்மதி, (B.A.) அவர்கள் (கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்)

இணைச்செயலாளர்- திருமதி மரகதம் குமாரவேல், B.A., M.L.A., அவர்கள் (செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)

கழக இலக்கிய அணி:

செயலாளர்- முனைவர் வைகைச்செல்வன் , M.A., B.L, D.Ed., D.Lit., Ph.D.. அவர்கள் (கழக செய்தித்தொடர்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்)

கழக வர்த்தக அணி நிர்வாகிகள்:

செயலாளர்- திரு. V.N.P.வெங்கட்ராமன், B.E., Ex. M.L.A., அவர்கள் (ஆலத்தூர் கிழக்கு பகுதிக் கழகச் செயலாளர் சென்னை புறநகர் மாவட்டம் )

இணைச்செயலாளர்-

திரு. A.M.ஆனந்தராஜா அவர்கள் (சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர், தூத்துக்குடி தெற்கு மாவட்டம்) கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com