இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
Published on

ஈரோடு,

ஈரோட்டில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசு பள்ளிக்கூடங்களில் தற்போது அதிக அளவில் மாணவ-மாணவிகள் சேர்ந்து வருகிறார்கள். அதற்கு தகுந்தாற்போல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வுக்காக புதிய அட்டவணை வெளியிடப்படும். அந்த பணிகள் அனைத்தும் ஒரு மாத காலத்துக்குள் நிறைவடையும். ஆசிரியர் தகுதி தேர்வில் 2013 மற்றும் 2017-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி அடிப்படையில் மதிப்பெண் பெற்றிருக்கிறார்களே தவிர வேலைவாய்ப்பு என்பது எவ்வளவு பணிகள் இருக்கிறதோ அந்த பணி இடங்களை மட்டுமே நாம் நிரப்ப முடியும்.

அதற்கு பின்னர் கூடுதலாக பணி நிரப்ப வேண்டும் என்றால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு இருக்கிறது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் எவ்வளவு காலிப்பணியிடங்கள் இருக்கிறது என்பதை அரசு முதலில் அட்டவணை மூலம் வெளியிடும். அதற்கு பிறகுதான் கூடுதலாக நிரப்ப முடியும். அதற்கு மேலும் இருந்தால் தேர்வு வைத்து தான் நிரப்ப முடியுமே தவிர வேறு வழியில்லை. பள்ளி கல்வித்துறை அலுவலக உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் நிரப்பப்படும்.

மகளிர் பள்ளிக்கூடத்தில் கூடுதல் கழிப்பறைகள் கட்ட மத்திய அரசிடம் இருந்து ரூ.500 கோடி நிதி கேட்கப்பட்டு உள்ளது. மத்திய அரசும் வழங்குவதாக ஒப்புதல் அளித்துள்ளது. அந்த நிதி கிடைத்த உடன் ஒவ்வொரு மகளிர் பள்ளிக்கூடத்திலும் கூடுதலாக 2 கழிப்பறைகள் கட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com